search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி புகார்"

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.
    • எனது கணவர் பெயரில் இடுக்கி மாவட்டத்தில் இருந்த ஏலத்தோட்டத்தையும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் போடியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான முத்து மனோகரன் மனைவி ஜான்சிராணி. தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் முத்துமனோகரன் போடி நகர்மன்ற தலைவராக இருந்தவர். தி.மு.க.வில் விவசாய அணிமாநில இணைச்செயலாளராகவும் இருந்தார்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். எனது கணவரின் சகோதரர் முத்தையா இறந்தபின் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் சேர்ந்து கூட்டுகுடும்பமாக வசித்து வந்தோம்.

    தனது சொத்துக்களை எனது கணவர் அனைவருக்கும் பிரித்து கொடுத்திருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு எனது மகனுக்கு தொழில் செய்து கொடுக்க வேண்டும் என்று கணவரின் அண்ணன் மகன் சேது மற்றும் மகள் ரதிதேவி ஆகியோர் ரூ.3 கோடியை கொடுத்து வைத்திருந்தார். இந்நிலையில் எனது கணவர் இறந்துவிட்டதாகவும், பிரேத பரிசோதனை செய்ததாகவும் கூறி போடிக்கு அவரது உடலை கொண்டு வந்தனர்.

    எனது கணவர் கொடுத்து வைத்த ரூ.3 கோடியை அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை. எனது கணவர் பெயரில் இடுக்கி மாவட்டத்தில் இருந்த ஏலத்தோட்டத்தையும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தனர். எனது கணவரை சொத்துக்காகவும், பணத்திற்காகவும் விஷம் வைத்து கொலை செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே இந்த இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • அந்த பெண்ணின் கணவன் மீது போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    டெல்லி மாநிலம் கிழக்கு ரோதாஷ் நகரைச் சேர்ந்த பெண்ணுக்கு, கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவரது கணவர், அந்த பெண்ணை ஆபாச படம் பார்க்கும்படி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். அதோடு, ஆபாச பட நடிகைகள் அணியும் உடையை அணிந்து, தன் முன் நிற்கும்படியும் வற்புறுத்தியுள்ளார். நீண்ட நாட்களாக கணவர் இவ்வாறு வலியுறுத்திய நிலையில், ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

    ஆபாச உடை அணிய வற்புறுத்துவதுடன், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மனதளவிலும், உடல் அளவிலும் துன்புறுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து அந்த பெண்ணின் கணவன் மீது போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை முதல் கட்டத்திலேயே இருக்கிறது என்று கூறிய துணை கமிஷனர் ரோகித் மீனா, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, டிஜிட்டல் மற்றும் பிற ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    • ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்ப ட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • வழக்குபதிவு செய்து காணாமல் போன கணேசனை தேடி வருகின்றார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காட்டா ண்டி க்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). விவசாயி, இவர்கடந்த1-ந் தேதி காலை 8 மணிக்கு பண்ருட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்ப ட்டு சென்றவர் வீடு திரும்பவி ல்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து காடாம்புலியூர் போலீசில் கணேசன் மனைவி மல்லிகா புகார் கொடுத்தார். காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன கணேசனை தேடி வருகி ன்றார்.

    • திருமணமாகி 11 வயதில் பெண் குழந்தையும்,7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
    • கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே செம்பளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்பவ ருக்கும் திருமணமாகி 11 வயதில் பெண் குழந்தையும்,7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமது கணவருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதனால் அவரது கணவர் அவரையும், பிள்ளைகளையும் விட்டு சென்று விட்டதாக விருத்தா சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    மேலும் அவரின் மாமியார், நாத்தனார், நாத்தனாரின் கணவர் உள்ளிட்டவர்கள் தம்மை கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தார். தனது கணவரை அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டு தன்னுடன் இணைந்து வாழ வைக்க வேண்டும் என்ற தனது 7 வயது மகன் மற்றும் உறவினர்களுடன் வந்து முனியம்மாள் புகார் அளித்தார்.

    • நேசவள்ளி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • திடீரென்று எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகர் சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 38). எலெக்ட்ரிசியன். இவரது மனைவி நேசவள்ளி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், கடந்த அக்டோபர் 1- ந்தேதி மின் ஊழியர் பாஸ்கர் என்பவர் எனது கணவர் ஜேசுதாசை அழைத்துக் கொண்டு தேவனாம்பட்டினம் சுடுகாடு அருகே ட்ரான்ஸ்பார்மரில் ஏறி வேலை செய்ய கூறியதால், எனது கணவரும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார்.

    பின்னர் இவரை மீட்டு கடலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல ப்பட்டு, சென்னைக்கு கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். அப்போது இடது கை நீக்கப்பட்டது. ஆகையால் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் மின் ஊழியர் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×